குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தினை தேன் உருண்டை! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக தானியங்கள் அதிகமாக சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கின்றது.
அந்த வகையில் உடலில் ஏற்படும் எலும்புகள் தொடர்பான நோய்களுக்கு தினை ஒரு சிறந்த மருந்தாக இருக்கின்றது.
மேலும் தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
அது மட்டுமன்றி தினையில் அரிசி, கோதுமை, கேழ்வரகு ஆகியவற்றை விட இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்றது.
அந்த வகையில் தினையின் முழு சத்தை எப்படி உடலுக்கு எடுத்து கொள்வது என சிந்தித்த போது கிடைத்த உணவு தான் தினை தேன உருண்டை.
இது எப்படி செய்வது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- தினை மாவு - ஒரு கப்
- பொட்டுக்கடலை மாவு - அரை கப்
- ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
- வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்
- நெய் - கால் கப்
- தேன் - கால் கப்.
தினை தேன் உருண்டை செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தினை, பொட்டுக்கடலை மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர் உருக்கிய நெய், எலுமிச்சை ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து சேர்க்கவும்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக கலந்த பின்னர் தேவையான அளவில் உருண்டையாக பிடித்து கொள்ளவும்.
பரிமாறும் பொழுது தேவை ஏற்பட்டால் சுவைக்காக தேன் கலந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |