கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஆபத்து: அழுகும் எலும்புகள்! விசித்திரமான புதிய நோய்
உலகம் முழுவதும் மக்களை பெரிதும் தாக்கிவரும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறிக்கொண்டு தீவிரமாக பரவிவருகின்றது.
கொரோனா பாதிப்பினால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு சிலர் உயிரிழந்தும், பலர் குணமாகியும் இருக்கின்றனர்.
தற்போது குணமானவர்களை குறிவைக்கும் Bone Death நோய் ஏற்படுகின்றது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ரத்தம் உறையும் பிரச்சினை ஏற்படலாம்.
ரத்த உறைவு எலும்புப் பகுதிக்குச் சென்றால் அங்கு ரத்தஓட்டம் பாதிக்கப்படுவதுடன், இடுப்பு எலும்புப் பகுதி மற்றும் மிக அரிதாக மூட்டி எலும்பகளிலும் பிற சிறிய எலும்புகளிலும் இது ஏற்படலாம்.
வலி தீவிரமாகி மூட்டு தேய்மானம், எலும்புப் பகுதி, குறுத்தெலும்பு உள்ளிட்டவை அழுகத் தொடங்கிவிடும். இதனையே Bone Death என்கின்றனர்.
பிரச்சினை தீவிரமானால் எலும்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு. கோவிட் சிகிச்சையின் போது அதீத ஸ்டீராய்டு மருந்துகள் பயன்பாடு, அதீத மதுப்பழக்கம், ரத்தம் உறைதல் குறைபாடு, ரத்த ஓட்டத்தில் பிரச்சினை, அதிக உடல்பருமன் உள்ளவர்களக்கும் இந்த பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு அதிகமாம். மேலும் இந்த பிரச்சினையால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று தெரியவந்துள்ளது.