பாம்பே பாணியில் நாவூரும் சுவையில் கடலை மாவு சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே வித்தியாசமான முறைகளில் சுவையாக சமைத்து சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்வது வழக்கம். இதற்கு அருமையாக சுவையில் பக்காவாக பொருந்தும் கடலை மாவு சட்னியை பாம்பே பாணியில் எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்க்லாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்மல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் கடலை மாவை எடுத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி, நன்றாக கட்டிகளின்றி மாவை கரைத்துக் எடுத்துக்கொள்ளவும்.
அதழனயடுத்து அதனுடன் மீண்டும் 2 கப் நீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் இஞ்சி, பூண்டு, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்துக்கு வரும் வலையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரைவில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு கலந்து வைத்துள்ள கடலை மாவு நீரை ஊற்றி கிளறி, மேலே கறிவேப்பிலையைத் தூவி, மூடி வைத்து, பத்து நிமிடங்கள் வரையில் மிதமான தீயில் வைத்து கொதிக்க வி்ட்டு, மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அவ்வளவு தான் பாம்பே பாணியில் கடலை மாவு சட்னி தயார்.

அட இது புதுசா இருக்கே! இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் போன ட்ரெண்டிங் ride... எதுலன்னு பாருங்க
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |