வயதானாலும் இளமை மாறாத கஜோல்- 20 வயது நடிகை போல் ஜொலிக்கும் முகம்.. அந்த அழகை பாருங்க
வயதானாலும் இளமை மாறாத நடிகை கஜோலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை கஜோல்
தமிழ் சினிமாவில், “மின்சார கனவு” என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை கஜோல்.
தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும், இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தழிழ் சினிமாவை தொடர்ந்து இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் கஜோலுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.
இவர்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பார்க்கலாம்.
“தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே“, “குச் குச் ஹோதா ஹை“, மற்றும் “கபி குஷி கபி கம்” போன்ற கிளாசிக் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
முதுமையிலும் சவால் விடும் அழகு
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் வில்லியாக நடித்தார்.
திரைப்படம் பெரிதாக பேசப்படாவிட்டாலும், கஜோலின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஜோல், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வார்.
அந்த வகையில், கஜோலின் 20 வயது நடிகை போன்று ஜொலிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |