வெறும் 5 நிமிடத்தில் குக்கரில் வடிசாதம் வைக்க முடியுமா? இதை நீங்களும் ட்ரை பண்ணலாமே
தமிழர்களின் முக்கிய உணவாக கருதப்படும் அரிசி சாதம் தயார் செய்வதற்கு குக்கர் பயன்படுத்தி வருகின்றோம். வெறும் 5 நிமிடத்தில் குக்கரில் தயாராகும் அரிசி சாதம் பல தீமைகளை நமக்கு ஏற்படுத்துகின்றது.
ஆனால் பானையில் அரிசி சாதம் வடித்து எடுக்கும் போது, அது உடம்பிற்கு தீங்கு விளைப்பதில்லை. தற்போது நாகரீகம் மாறிவருவதாலும், நேரத்தினை மிச்சப்படுத்தவும் பலரும் குக்கர் சாதத்தில் இறங்கியுள்ளனர்.
சரி இந்த குக்கர் சாதத்தில் வடிசாதமாக வைப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு அட்டகாசமான பதில் இதோ.
நாம் எப்போதும் குக்கரில் சாதம் வைப்பது போன்று அரிசி மற்றும் தண்ணீரை அளவாக வைத்து குக்கரில் விசில் வைப்பார்கள்.
அதே போன்று 1 டம்ளர் அரிசி எடுத்துக்கொண்டால் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கும் போது, ஒரு ஐந்து விசில் வரும் வரை வைத்துவிட்டு பின்பு ஸ்டவ்வை அணைத்து விட வேண்டும்.
பின்பு குக்கரை திறந்து பார்த்தால் முக்கால் பதத்திற்கு வெந்திருக்கும் அரிசியை சற்று கொதிக்க வைத்து பின்பு வடித்துக் கொள்ளவும். இப்போது குக்கரைப் பயன்படுத்தி வெறும் 5 நிமிடத்தில் வடிசாதத்தினை தயார் செய்து கொள்ளலாம்.