ஒரு குவளை பெருங்காய தண்ணீர் போதும்: இனி ஆயுளுக்கு எடை அதிகரிக்காது
பொதுவாக தற்போது இருக்கும் வாலிபர்களுக்கு உடல் பருமன் குறைப்பு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் பல வழிகளில் இவர்கள் பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.
இப்படியான பிரச்சினைகளுக்கு எமது முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தும் மூலிகை தான் பெருங்காயம்.
இந்த பெருங்காயம் கொரோனா காலப்பகுதிகளில் மக்களால் அதிகமாக தேடப்பட்டது. ஏனெனின் நுண்ணங்கிகளிடமிருந்து எம்மை பாதுகாக்கும் சக்தி இந்த பெருங்காயத்திற்கு இருக்கிறது.
இது மட்டுமல்ல இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் சமிபாட்டு பிரச்சினையும் சரிச் செய்கிறது. அந்த வகையில் உடல் பருமன் குறைப்பதற்கு பெருங்காயத்தை எப்படி எடுத்து கொள்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 1 டம்பளர்
பெருங்காய பொடி - 2 மேசைக்கரண்டி
டம்பளர் - 1
செய்முறை
முதலில் ஒரு டம்ளரை எடுத்து அதில் தண்ணீரை விட்டு பின்னர் தேவையானளவு பெருங்காய பொடி அல்லது பெருங்காயத்துண்டை தண்ணீரில் விட வேண்டும்.
நன்மைகள்
- இவ்வாறு செய்து குடிப்பதால் இரத்திலிருக்கும் சர்க்கரையின் அளவு குறைக்கப்படும்.
- கெட்ட கொழுப்பை கரைத்து உடல் பருமனையும் குறைக்கிறது.
- உணவினால் ஏற்படும் அழற்றி பிரச்சினை இருப்பவர்கள் பயமில்லாமல் இந்த தண்ணீரை குடிக்கலாம்.
- தலைவலி அதிகம் உள்ளவர்கள் இப்படியான ஒரு முறையில் பெருங்காயத்தை எடுத்து கொள்வது நல்லது.
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த பெருங்காயம் துண்டு எடுத்து கொள்வது வழமை. இது உடல் சூட்டை பேணுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.