தினமும் செய்யும் தவறு...உடலில் இந்த பாகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய கூடாது காரணம் என்ன?
நாம் நமது உடலில் குறிப்பிட்ட சில பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்வது தவறானது. இதனால் வரும் ஆபத்தை மருத்துவ விளக்கத்தின்படி பார்க்கலாம்.
உடலில் அடிக்கடி சுத்தம் செய்யகூடாத பாகங்கள்
நாம் தினமும் இரண்டு முறை குளித்து நமது உடல் பாகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி நாம் உடலில் சில பாகங்களை குறைவாக சுத்தம் செய்தால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே நமது முகத்தை கழுவ வேண்டும். காரணம் நமது சருமத்தில் உருவாகும் இயற்கை எண்ணெய் அப்படியே இருக்கும்.
நாம் அடிக்கடி முகத்தை கழுவும் போது அது இயற்கை எண்ணெய்யை அழித்து சருமத்தில் இறந்த செல்களை அகற்றாமல் பருக்கள் பிரச்சனையை கொண்டு வரும்.
காதுகள் இயற்கையாகவே ஒரு மெழுகு போன்ற பதத்தை கொண்டு வந்துள்ளது. இது தூசு மற்றும் மாசுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது. எனவே எப்போதும் பருத்தி விரல் மற்றும் விரல்கள் கொண்டு காதை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் குளிக்கும் போது எப்போதும் ஷாம்பூவை பயன்படுத்த கூடாது. இது தலையில் இருக்கும் இயற்கை எண்ணெய்ணையை முற்றாக அழித்து தலைமுடிக்கு வறட்சியை கொடுக்கும்.
அடிக்கடி மூக்கை சுத்தம் செய்ய கூடாது. ஒரு விரலால் மூக்கை சுத்தம் செய்யும் போது மூக்கில் சிறிய கீறல்கள் உருவாகி அது கிருமி தொற்றுக்கு வழிவகுக்கும். இவ்வாறான விடயங்களை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |