தொப்பையைக் குறைக்க முன்னோர்கள் பயன்படுத்திய வெறும் இரண்டு பொருள் தெரியுமா?
இன்றைய காலத்தில் பலரையும் பாடாய் படுத்தியெடுப்பது உடல் எடையும், தொப்பையும் தான். இதனைக் குறைப்பதற்கு பலவிதமான டயட் மற்றும் உடற்பயிற்சி என செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒருசில பானங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை வேகமாக எரிக்க உதவி புரிந்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க உதவுகின்றன. அந்த வகையில், இன்று நாம் உடல் எடையைக் குறைக்கும் இலக்கை அடைய உதவும் ஓர் அற்புதமான பானத்தை முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதைக்குறித்து தற்போது காணலாம். எலுமிச்சையில் வெல்லம் கலந்து குடித்தால் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் விரைவில் குறைந்துவிடும். தேவையான பொருட்கள் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் வெல்ல பவுடர் - ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் - ஒரு டம்ளர் தயாரிக்கும் முறை ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து, அதன் பின்னர் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் கலந்தால், பானம் தயார்.
இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறைவதைக் காணலாம்.