Viral Video: கழுத்தில் பாம்புடன் ஷாப்பிங் சென்ற நபர்
நபரொருவர் பெரிய போவா கன்ஸ்டிரிக்டர் பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஷாப்பிங் சென்ற பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
போவா கன்ஸ்டிரிக்டர் என்ற பாம்பு இனத்தின் அறிவியல் பெயர் போவா கன்ஸ்டிரிக்டர் ஆகும். பொதுவான போவா என்றும் அழைக்கப்படுகிறது.
இது பெரிய, விஷமற்ற, ஆனால் பிரம்மாண்டமான உடல் அமைப்பை கொண்ட பாம்பு வகையாகும். இது அடிக்கடி சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.
Boa constrictor என்பது Boidae குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த இனத்தின் தாயகம் வெப்பமண்டல தென் அமெரிக்கா.
தனியார் சேகரிப்புகள் மற்றும் பொதுக் காட்சிகளின் இந்த பாம்புகள் பிரதான இடம் வகிக்கின்றது. நிறம் மாறக்கூடிய தன்மையில் இருப்பதே இதன் சிறப்பம்சமாகும். இந்த ராச்சத தோற்றம் கொண்ட பாம்புடன் நபரொருவர் ஷாப்பிங் சென்ற காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
