பிக் பாஸ் Red Card கொடுப்பாரா? போட்டியாளர் ஷூவில் Bluetooth! கடும் சர்ச்சைக்குரிய குறும்படம்
பிக் பாஸில் மணிகண்டன் சப்பாத்தில் ப்ளூடூத் பயன்படுத்தியிருக்கும் சர்ச்சை இணையத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. தற்போது 36 நாட்களை கடந்து விறுவிறுப்பு குறையாமல் ஓடி வருகிறது.
இந்த முறை போட்டியாளர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் சிலர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
பிக் பாஸில் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மணிகண்டன் விதியை மீறினாரா?
இந்த நிலையில் நிகழ்ச்சியில் போட்டியாளர் மணிகண்டன் விதியை மீறி இருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. வைரலாகும் குறும்படத்தில் நிவாஷினியும், மைனாவும் ப்ளூடூத் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது மைனா, நானும் மணியும் ப்ளூடூத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
மணிகண்டன் சப்பாத்தில் ப்ளூடூத் இருக்கிறது என்று நினைத்து பிக் பாஸ் அணியினர் சப்பாத்தினை பரிசோதிக்க எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று கூறுகின்றார்.
Bigg Boss took away Manikanta's shoe after he revealed it has Bluetooth connectivity.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 15, 2022
#BiggBossTamil6 pic.twitter.com/WJNlSpedTl
பிக் பாஸ் Red Card கொடுப்பாரா?
இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையில் மணிகண்டன் விதியை மீறியிருந்தார் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பார்க்கலாம் சப்பாத்தில் உண்மையில் ப்ளூடூத் பயன்படுத்தப்பட்டதா என்பதை.