ப்ளூடூத் ஹெட்செட் மாட்டிக்கொண்டே பேசிய சிறுவன் உயிரிழப்பு- மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்!
ப்ளூடூத் ஹெட்செட் மாட்டிக்கொண்டே போன் பேசிக்கொண்டிருந்த சிறுவனின் போன் வெடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமு பகுதியில் உதய்புரியா கிராமத்தில் வசிப்பவர் 15 வயது சிறுவன் ராகேஷ். இந்த சிறுவன் அடிக்கடி ப்ளூடூத் ஹெட்செட் இயர்போனை பயன்படுத்தி பேசி வந்துள்ளான்.
இதையடுத்து, கடந்த நாளில், ப்ளூடுத் ஹெட்செட் பயன்படுத்தி பேசி வந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தொலைபேசி சாதனம் வெடித்துள்ளது.
ராகேஷின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் உடனடியாக சித்திவிநாயக் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் கூறியதாவது, இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது முதல் வழக்கு, அந்த சிறுவன் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், போன் வெடித்ததில் சிறுவனின் இரு காதுகளும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.