வடிவேலு காமெடியை வைத்து ரஜினியை வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ஜெயிலர் அலப்பறை!
ஜெயிலர் வெற்றிக்கான அந்த 420+ கோடி வடையை சீக்கிரம் இறக்குங்கப்பா” என புளூ சட்டை மாறன் போட்ட டுவிட் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இன்றும் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் “ ஜெயிலர் ” திரைப்படம் திரைக்கு வந்தது.
இந்த திரைப்படம் இயக்குநர் வெற்றிக்கு பெரிய பங்கு வகின்றமையினால் சமூக வலைத்தளங்களில் ரஜினி, தமன்னா மற்றும் பீஸ்ட் விஜய் என அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
டுவிட் போட்ட புளூ சட்டை மாறன்
இந்த நிலையில் ப்ளு சட்டை மாறன் ஒரு சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “ விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வசூலை ஜீரணிக்க முடியாமல் தான் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா என கதைக்கு தேவையே இல்லாத ஆட்களை தேடிப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டு பான் இந்தியா பருப்பு வடையாக இந்த படத்தை ரஜினிகாந்த் உருவாக்கி உள்ளார்.” என கலாய்க்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, “சீக்கிரம் அந்த 420+ கோடி வடையை இறக்குங்கப்பா. விக்ரமை வீழ்த்திட்டு நாளைக்கி, 500 crore பொன்னியின் செல்வனை தாண்டனும்.” எனவும் டுவிட் போட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் டுவிட் பார்த்த விமர்சகர்கள் ஜெயிலர் படக்குழுவை தரமான சம்பவம் செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |