வெளிநாட்டு இசையை திருடி சர்ச்சையில் சிக்கிய அனிருத் : வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்
கோலிவுட்டில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் தலைவர் 170 மற்றும் 171, கமலின் இந்தியன் 2 என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் விஜய்யின் லியோ’ படத்தில், வெளிநாட்டு இசைக் கலைஞர் ஓட்னிகாவின் பாடலைத் திருடி பயன்படுத்தப்பட்டிருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அண்மையில் அனிருத் இசையமைப்பில் விஜய் நடித்த லியோ படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. அப்படத்திற்காக அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் கொடுத்துள்ளன.
லியோ பாடலில் சர்ச்சை
இந்த நிலையில், லியோ படத்துக்காக அவர் இசையமைத்த Ordinary person என்கிற ஆங்கிலப்பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இது பல்கேரியா நாட்டை சேர்ந்த சுயாதீன இசைக்கலைஞரான ஓட்னிகா என்பவர் இசையமைத்த வேர் ஆர் யூ என்கிற ஆல்பம் பாடலின் அப்பட்டமான காப்பி என இணையதன வாசிகள் ஒப்பிட்டு வந்ததோடு, ஓட்னிகாவையும் இன்ஸ்டாகிராமில் டேக் செய்து, அனிருத் தங்கள் பாடலை திருடி விட்டதாக கூறி வருகின்றனர்.
இதைப்பார்த்து ஷாக் ஆன ஓட்னிகா, தனக்கு லியோ பாடலைப் பற்றி நூற்றுக்கணக்கான மெசேஜுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதைப்பற்றி ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக தங்களிடம் யாரும் உரிமை கோரவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில், காப்பி சர்ச்சையில் சிக்கி இருக்கும் அனிருத்தை சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு டுவிட்டர் தளத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
வெளிநாட்டு மியூசிக்கை திருடி தொடர்ந்து அசிங்கப்பட வேண்டியது. ஆனா பேரு மட்டும் Rock Star.
— Blue Sattai Maran (@tamiltalkies) October 25, 2023
Robbery Star னு மாத்திக்கலாம்.
இதெல்லாம் ஒரு பொழப்பு.
கொஞ்சநாள் முன்னாடி ஒருத்தன் சொன்னான்... இவன் இளையாராஜாவும், ரஹ்மானும் கலந்த கலவையாம். ப்ளடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |