Viral Video: நொடியில் மீனை தக்க வைத்த கழுகு... நாரையின் வழிபறியில் நடந்த ஏமாற்றம்
கழுகு ஒன்று மீனை வேட்டையாடிய நிலையில், அதனை தட்டிப்பறிக்க வந்த நாரை ஒன்று ஏமாந்து சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் அசால்ட்டான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.
இங்கு கழுகு ஒன்று தண்ணீரிலிருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ளது. இதனை தட்டிப்பறிக்க அடுத்த நொடியில் நாரை ஒன்று அதனை மோதியுள்ளது.
ஆனால் கழுகு நொடிப்பொழுதில் தான் பிடித்த மீனை தக்கவைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளது. வழிபறி செய்ய நினைத்த நாரை ஏமாற்றத்துடன் காணப்படும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |