Viral Video: நாரையின் கம்பீரமான மீன் வேட்டை... சலிக்காத சுவாசிய காட்சி
நாரை ஒன்று மீனை தனது அலகால் கொத்தி வேட்டையாடிவிட்டு வீரநடை போட்டுவரும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ளது.
இந்த நாரையானது மீனை வேட்டையாடியுள்ள நிலையில், எதிர்பாராத வகையில் மீன் நாரையின் அலகில் மாட்டிக் கொண்டுள்ளது. என்னதான் தனது உடம்பில் காயம் ஏற்பட்டாலும் மீன் நாரையிடமிருந்து தப்பிக்க பயங்கரமாக போராடியுள்ளது.
நாரை தனது அலகால் கொத்திய மீனுடன் கம்பீரமான நடையை போட்டுள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |