Viral Video: எத்தனை தடவை செய்த முயற்சி? கடைசியாக நடந்த நண்டு வேட்டை
பறவை ஒன்று பலமுறை முயற்சித்து ஒரு நண்டை வேட்டையாடி வானில் பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நண்டை உணவாக்கிய பறவை
சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது White Ibis என்ற பறவை நண்டு ஒன்றினை வேட்டையாடும் காட்சியை காணப்போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு White Ibis பறவை ஒன்று தனது பசிக்காக வேட்டையாடுவதற்கு பலமுறை தண்ணீருக்குள் தனது இரையை தேடியுள்ளது. மூன்று முறை முயற்சித்து கடைசியாக நான்காவது முறையாக நண்டு ஒன்று அகப்பட்டுள்ளது.
குறித்த நண்டை எடுத்துக்கொண்டு அதனை சாப்பிடுவதற்கு மிகவும் தோரணையாக பறந்து சென்றுள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த காட்சியினை அவதானிக்கும் போது பறவையின் நிதானம், பொறுமை மனிதர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |