Viral Video: ஒரு மீனை பிடிக்க எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறது? நாரையின் அசத்தல் வேட்டை
நாரை ஒன்று பெரிய மீனை வேட்டையாடுவதற்கு தண்ணீருக்குள் தனது தலையை விட்ட நிலையில், சில நொடிகள் தண்ணீரிலிருந்து வெளியே வராமல் பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனை குறிவைத்து தண்ணீருக்குள் தனது தலையை விட்ட நிலையில், சில நொடிகள் தலையை எடுக்காமல் தண்ணீருக்குள்ளேயே சென்றுள்ளது.
இக்காட்சி சில நொடியில் பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நொடியில் வாயில் மீனுடன் கெம்பீரமாக எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |