நான் பக்கா கிராமத்துக்காரி... செருப்பால் அடிப்பேன்... பிக் பாஸ் தாமரை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
நடிகை தாமரையிடம் சீரியல் நடிகையின் கணவர் ஆதி பணம், நகை ஏமாற்றியதாக சமீபத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது தன்னை அவதூறாக பேசிய பயில்வானுக்கு தாமரை காணொளி ஒன்றினை வெளியிட்டள்ளார்.
பிக் பாஸ் தாமரை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தாமரை செல்வி.
தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் நிலையில், சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகிக்கு தாயாக நடித்து அசத்தினார்.
பின்பு குறித்த சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்வேதாவின் கணவர் ஆதி தன்னை ஏமாற்றி நகை, பணம் வாங்கியதாக கூறி காணொளி வெளியிட்டிருந்தார் தாமரை.
அதுமட்டுமின்றி காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்த நிலையில் தற்போது புதிய காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவதூறாக பேசிய பயில்வான்
தாமரையை மட்டுமின்றி நடிகை வைஷ்ணவி, TTF வாசன் இவர்களையும் ஆதி ஏமாற்றியுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாமரைக்கும், ஆதிக்கும் தவறான பழக்கம் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்த நிலையில், இதற்கு தாமரை சரியாக பதிலடியைக் கொடுத்துள்ளார்.
நான் பக்கா கிராமத்துக்காரி... நேரில் கண்டால் செருப்பால் அடிப்பேன் என தனது ஆவேசத்தினைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |