இரத்த சர்க்கரையை கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் வொட்ச்!
மாறி வரும் தொழில்நுட்பங்கள் நம்மை ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஆச்சரியத்தில் திளைக்க வைக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூறும் அளவுக்கு புதிது புதிதாக ஒவ்வொரு விடயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
2010 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜொப்ஸ் தலைமை பதவியிலிருந்தபோது ஒரு திட்டத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதாவது, தனது அப்பிள் கைக்கடிகாரத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்காணிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதே அது.
தற்சமயம் வரையில் ஊசி மூலம் துளையிடப்பட்டே இரத்தம் எடுத்து பரிசோதிக்கப்பட்டு சர்க்கரையின் அளவு கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த வலி மிகுந்த செயன்முறையை தவிர்ப்பதற்காக அப்பிள் நிறுவன விஞ்ஞானிகளும் உலகின் முன்னணி மருத்துவமனைகளும் ஆய்வொன்றில் ஈடுபட்டனர்.
Optical Spectroscopy என்று கூறப்படும் மணிக்கட்டில் உள்ள இரத்த நாளங்களை ஊடுருவி ஸ்கேன் செய்யும் ஒரு அம்சமானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியாக கணித்து விடுகிறது. இந்த புதிய அம்சம் இன்னும் ஒரு வருடத்தில் சந்தைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.