பார்வையற்ற கிராமம்: சபிக்கப்பட்ட மரம் தான் காரணம் என எண்ணும் மக்கள்
இந்த உலகில் பல விடயங்கள் நம்மால் நம்ப முடியாத விதத்தில் காணப்படுகின்றது. அந்த வகையில் பார்வையற்றோர் கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அதாவது, ஒரு கிராமத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்துமே பார்வைத்திறனற்றவர்கள். அதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு.
அதாவது, மெக்சிக்கோவில் டில்டெபாக் என்ற கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாது. இங்கே ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் கண்கள் நன்றாக இருக்கும். ஆனால், படிப்படியாக கண்கள் பார்வையற்றதாக மாறிவிடும்.
இதற்கு காரணமாக இவர்கள் நினைப்பது, அந்தக் கிராமத்தில் உள்ள சபிக்கப்பட்ட மரமே. அதாவது, லாவாசுலேவா என்ற மரத்தை அந்தக் கிராமத்திலுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் பார்க்கும்போது அனைவரும் பார்வையற்றவர்ககளாக மாறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்தக் கிராமத்மதில் விஷ ஈக்கள் காணப்படுவதாகவும் அந்த ஈக்கள் கடிப்பதனால் ஒரு நபர் பார்வையற்றவராக மாறுகிறார் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்காக மெக்சிக்கோ அரசு அந்த கிராம மக்களுக்காக உதவ முன்வந்தும் அது பலனளிக்கவில்லை.