மாதவிடாயின் போது கண்களிலிருந்து வரும் ரத்தம்... இளம்பெண்ணின் பரிதாபநிலை
இந்திய மாநிலமான சண்டிகரைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவருக்கு கண்களிலிருந்து ரத்தக்கண்ணீர் வந்துள்ளது. குறித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்கண்ட சோதனைகளில் எல்லாம் அவருக்கு எந்தவொரு பிரச்சினை இல்லை என்றும் கண்களிலும் பாதிப்பு எதுவும் இல்லை என்று வந்துள்ளதால் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மேலும் இவ்வாறு கண்களிலிருந்து ரத்தம் வழியும் போது அவருக்கு எந்தவொரு வலியும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணிடம் இறுதியாக விசாரித்த போது தனக்கு இவ்வாறான ரத்தக்கண்ணீர் இரண்டு முறை வந்துள்ளதாகவும், அதுவும் தனது மாதவிடாயின் போதே இவ்வாறு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது குறித்த பெண்ணிற்கு ocular vicarious மாதவிடாய் எனப்படும் அரிய நிலை நோய் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.