கருப்பு உளுந்தில் மொறு மொறு தோசை! நீரிழிவு நோயாளியும் ருசித்து சாப்பிடலாம் - ஒரு துளி நல்லெண்ணெய் விடுங்க
கருப்பு உளுந்தில் பல ஆரோக்கியமான உணவுகளை செய்து ருசிக்கலாம்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஒழுங்குபடுத்தப்படும்.
கருப்பு உளுந்து சருமத்திற்கு மிகவும் நல்லது. முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.
இதயத்திற்கு மிகவும் நல்லது. கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எடையை குறைக்க விரும்புவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
கருப்பு உளுந்தை கொண்டு இன்று மொறு மொறு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி - அரை கப்
- கருப்பு உளுந்து - 1 கப்
- சீரகம் - கால் டீஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
இட்லி அரிசி மற்றும் கருப்பு முழு உளுந்து இரண்டையும் தனித்தனியே 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு இதனுடன் சீரகம் இஞ்சி உப்பு சேர்த்து அரைத்து 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
புளிக்கத் தேவை இல்லை. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாசை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது நல்லெண்ணெய் ஊற்றி எடுக்கவும்.
சத்தான கருப்பு உளுந்து தோசை தயாராகி விடும்.
விருப்பமானவர்கள் நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் விட்டு தோசை சுட்டு சாப்பிடலாம். மொறு மொறு சுவையில் கிடைக்கும்.