அட கொடுமையே! இதுலையும்மா இப்படி... இணையத்தில் வைரலாகும் கருப்பு இட்லி!
இன்றைய உணவு வகைகளில் கிரியேட்டிவிட்டியை புகுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கிரியேட்டிவிட்டி என்ற பெயரில் சில வித்தியாசமான உணவுகளை செய்து வருகின்றனர்.
சிலர் தயாரித்த உணவு காம்பினேஷன்கள் நன்றாக இருக்கிறது. பலரது காம்பினேஷன்கள் சகிக்க முடியவில்லை. அந்த வகையில், ஏற்கனவே மில்க் ஷேக் மேகி, பட்டர் சிக்கன் பானி பூரி மற்றும், பேன்டா ஆம்லெட் என பல வகை உணவுகள் வைரலாகி வந்தன.
அந்த வரிசையில், தற்போது கருப்பு இட்லி தயாரிப்பு வீடியோ தான் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நாக்பூரை சேர்ந்த விவேக் மற்றும் ஆயிஷா என்பவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோ காட்சியில் சாம்பல் நிறத்தில் மாவை ஊற்றி இட்லியை வேக வைத்து பின்னர் இட்லி பொடியல்லாம் தூவி பரிமாறுகின்றனர். மேலும் இட்லியில் நெய் சேர்த்தும் உள்ளனர்.
இந்த இட்லியானது நாக்பூரின் உள்ள வாக்கர்ஸ் தெருவில் உள்ள ஆல் அபௌட் இட்லி என்ற இடத்தில் கிடைக்கிறதாம். இந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.