ஒரே வாரத்தில் இடுப்புக்கு கீழ் முடி வளரனுமா? ஷாம்புடன் இதை யூஸ் பண்ணுங்க!
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் தலைமுடி உதிர்வு, பொடுகு, பேன் என பல பிரச்சினைகள் இருக்கும்.
இதனை சரி செய்வதற்காக சலூன்கள் மற்றும் பல இரசாயன கலந்த ஷாம்போக்கள் பயன்படுத்துவார்கள்.
இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் தற்காலிக தீர்வை மாத்திரமே பெறமுடியுமே தவிர, நிரந்தர தீர்வைப் பெற முடியாது.
இதனை தொடர்ந்து தலைமுடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் வீட்டிலிருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி நிரந்த தீர்வைப் பெற முடியும்.
அந்த வகையில் வீட்டிலிருக்கும் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி, தலைமுடி உதிர்வைக் கட்டுபடுத்தும் ஒரு கலவை தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- 3 மேசைக்கரண்டி
- ஷாம்பு - தேவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கருஞ்சிரகத்தை அதில் போட்டு நன்றாக பொரியும் வரை வறுக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து நன்றாக பொரிந்திருக்கும் கருஞ்சிரகத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
சீரகம் நன்றாக வறுத்து அரைக்கும் போது ஆயில் மாதிரியான திரவம் கசிய ஆரம்பிக்கும்.
இந்த பொடியை சுமாராக 3 தடவைகள் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஜாடியில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து நாம் பயன்படுத்தும் ஷாம்புடன் இந்த பொடியை சேர்த்து கலந்துக் கொள்ளவும், நாம் காலையில் குளிக்க வேண்டும்.
இதனை இரவு கலந்து அறையிலிருக்கும் வெப்பநிலையில் வைத்துக் கொள்ளவும், பின்னர் காலையில் தலையில் படும் வரை நன்றாக தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.