டைப் 2 நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடித்தால் என்ன நடக்கும்? இனி தெரிஞ்சிக்கோங்க!
உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பிளாக் காபி மிக சிறந்த தீர்வாகும்.
டயட், உடற்பயிற்சி, விரதம், பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, என பல முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு உடல் எடை குறையாமல் அப்படியே இருக்கும்.
அப்படிபட்டவர்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் பிளாக் காபியை முயற்சித்துப் பாருங்கள்.
எப்படி உடல் எடை குறைகிறது?
- பிளாக் காபி அருந்துவதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
- இது கெட்ட கொழுப்பை எரிக்க உதவும்.
- இதனால் கொழுப்பால் உண்டான உடல் பருமன் குறையும்.
- பசியைத் தூண்டும் ஹார்மோன் ஆன பெப்டைட்டுக்கு எதிராக பிளாக் காபி செயல்படும்.
- இதனால் தேவையற்ற கலோரிகள் எடுத்துக் கொள்வதும், உடலில் சேர்வதும் தடுக்கப்படும்.
- பொதுவாக பிளாக் காபியில் கலோரிகள் நிறைந்த பால், சர்க்கரை போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை.
- கலோரிகள் அற்ற பிளாக் காபியை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும்.
- ஆனால் சர்க்கரை கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
பிளாக் காபி குடிப்பதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க முடியும்.
தினமும் 1 அல்லது 2 கப் பிளாக் காபி குடிப்பதால் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பிளாக் காபியில் உள்ள காபின் நரம்பு மண்டலத்தை தூண்டி, இரத்தத்தில் அட்ரீனல் அளவை அதிகரிக்கிறது.
இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.