சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்... இதை வாரத்திற்கு 3 முறை குடித்தால் போதும்!
உடலில் ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைத்தால், உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, நமது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது,
இதன் காரணமாக நாம் அடிக்கடி வேறு சில ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் போராடுகிறோம். கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது பாகற்காய்.
பலருக்கு பிடிக்காத காயாக இருக்கும் பாகற்காயில் அடங்கி இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. பாகற்காயில் வைட்டமின் சி உள்பட பல வைட்டமின்கள் காணப்படுகின்றன. நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் ஆகிய பிற முக்கிய தாதுக்கள் இதில் உள்ளது.
வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் -
சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாகற்காயை விட சிறந்த காய்கறி வேறொன்றும் இல்லை. வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
ஆஸ்துமாவுக்கு
வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.
வயிற்று புழுக்கள் ஒழிய
வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழித்து வெளியேற்றும். மேலும், பாகற்காய் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவி செய்யும். பாகற்காய் ஜூஸ்ஸில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
புற்று நோய்க்கு
வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், ஒவ்வாமை மற்றும் தொற்றிலிருந்து தடுக்கும். மேலும், பாகற்காய் உள்ள சத்துக்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவி செய்யும்.
உடல் எடை குறைய
வாரத்திற்கு 3 முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், பாகற்காயில் குறைவான கலோரி மற்றும் ஃபைபர் சத்து நிறைந்திருப்பதால் எடை இழப்பிற்கு உதவி செய்யும். மேலும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.