இலங்கை றீ(ச்)ஷாவில் இயற்கை உரங்களால் காய்த்துக் குலுங்கும் பாகற்காய்!
கிளிநொச்சியில் (kilinochchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் பாகற்காய் பயிர்ச்செய்கையின் முதலாவது அறுவடை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு,கோழிவளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பாகற்காய் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. றீ(ச்)ஷா பண்ணையின் பாகற்காய் அறுவடை தொடர்பிலான முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |