ரூ.300 கோடி மதிப்புள்ள பிட்காயினுக்கு ஆசைப்பட்ட பொலிஸ் : இறுதியில் அவிழ்ந்த உண்மைகள்
இன்றைய மக்கள் விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர்.
அதிலும் இன்று ஆன்லைனில் அதிகமாக வேலை செய்து வருபவர்கள் கிரிப்டோகரன்சி என்ற கண்ணில் அவதானிக்க முடியாத பணத்தினை வைத்து அதிக லாபம் சம்பாதிப்பதுடன், நொடியில் பணக்காரர் ஆகியும் வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 300 கோடி மதிப்புள்ள பிட்காயின் கிரிப்டோகரன்சியை அபகரிப்பதற்காக, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தரகரை தாக்கி கடத்தி சென்றுள்ள சம்பவம் அதிர் வைத்துள்ளது.
இதுகுறித்து புனே பொலிசார் கூறுகையில், புனே சைபர்கிரைமில் வேலை பார்த்துவந்த கான்ஸ்டபிள் திலிப் துக்ரம் காந்த்ரே என்பவருக்கு விஜய் நாயக் என்ற பங்குச்சந்தை தரகரிடம் ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் கிரிப்டோகரன்சி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் அந்த பிட்காயினை அபகரிக்க நினைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து திட்டம் ஒன்றினை தீட்டியுள்ளார்.
கடந்த மாதம் 14ம் தேதி விஜய் நாயக்கை ஹோட்டலில் இருந்து கடத்தி சென்றுள்ள நிலையில், கடத்தப்பட்ட தரகரின் நண்பர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விடயம் பொலிஸ் வரை சென்றதால் 8 பேரும் சேர்ந்து கடத்தியவரை சாலையில் விட்டு சென்று எஸ்கேப் ஆகியுள்ளனர். பின்பு கடத்தப்பட்ட தரகர் விஜய் நாயக்கிடம் விசாரணை மேற்கொண்டு, அவர் அடையாளம் காண்பித்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம்.
பிட்காயின் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் விலை சில டாலர்களே. ஆனால் தற்போது ஒரு பிட்காயினின் விலை $38,439 டாலர்களை தாண்டி நிற்கிறது.
மக்கள் இதனை வரவேற்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இதனை யாராலும் கண்காணிக்க முடியாது.
ஆகையால் இதற்கு வருமான வரி என்பது அவசியமில்லை. ஆகையால் தற்போது சில வர்த்தக நிறுவனங்கள் கூட தற்போது பிட்காயின்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
உலகம் முழுக்க பிட்காயின் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யவதோடு மற்றவர்களுக்கும் அனுப்பலாம். எண்ம நாணயமான (டிஜிட்டல் கரன்சி) இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா என்பவர் தான்.
குறித்த நாணயத்தினை எந்தவொரு அரசாங்கமும் கட்டுப்படுத்த முடியாது. அதாவது நாம் புழக்கத்தில் வைத்திருக்கும் பணத்தினை ஏதாவது மத்திய அமைப்பு தான் கட்டுப்படுத்தும். ஆனால் இதனை அவ்வாறு கட்டுப்படுத்த இயலாது.
இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது.
ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. பெரும்பாலும் பிட்காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட்காயினைப் பயன்படுத்த முடியும்.
பிட்காயின்களை தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியுமாம்.