”கிரிப்டோகரன்சி” ஒரே நிமிடத்தில் 300 மில்லியன் பவுண்ட்ஸை இழந்த வாலிபரின் சோக கதை
LAPTOP-யை குப்பை தொட்டியில் வீசியதால் இளைஞர் ஒருவர் ஒரே நிமிடத்தில் 300 மில்லியன் பவுண்ட்ஸை இழந்த சம்பவம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது, நாளுக்குநாள் இதன் மீதான ஈடுபாடும் மக்களுக்கு அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.
இளைஞர் ஒருவர் கடந்த 2010ம் ஆண்டு 50 பவுண்ட்ஸ்களுக்கு ஆறு கிரிப்டோ கரன்சிகளை வாங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாதால் கிரிப்டோகரன்சி வாங்கியதை மறந்துவிட்டார்.
தற்போது அவருக்கு கிரிப்டோகரன்சி பற்றி நினைவுக்கு வர, LAPTOP-யை தேடியுள்ளார், ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தாயிடம் கேட்க, குப்பை தொட்டியில் வீசியதாக கூறியுள்ளார்.
தற்போது அவர் வாங்கிய கிரிப்டோகரன்சியின் மதிப்பு சுமார் 300 மில்லியன் பவுண்டுகள் ஆகும், இதனால் பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம்.