உடல் எடையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? பீர்க்கங்காய் செய்யும் அற்புதம்
நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் ஒன்றான பீர்க்கங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பீர்க்கங்காய்
பீர்க்கங்காய் ஒரு சிறந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். அதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
இதில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் செய்கின்றது.
பீர்க்கங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதுடன், உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடும் இருக்கும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
இதில் இருக்கும் ஃபைபர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், இதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை குறைக்க உதவுகின்றது.
வைட்டமின் சி சத்துக்களைக் கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றது.
பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
புற்றுநோயை தடுப்பதுடன், பீர்க்கங்காயில் உள்ள பீட்டா கரோட்டின் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |