பறந்துவந்த பறவை! அசால்ட்டாக பணத்தை திருடிச் சென்ற காட்சி
பறவை ஒன்று அசால்ட்டாக பணத்தை திருடி செல்லும் காட்சி காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் பறவைகள் அனைத்தும் தங்களது எஜமானருக்கு விசுவாசமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் அவர் மீது அளவுகடந்த பாசத்தினையும் வைத்திருக்கும்.
ஆனால் ஐந்தறிவு படைத்த பறவை மற்றும் விலங்குகள் எந்த இடத்திலும் மனிதர்களிடமிருந்து பொருட்கள் எதையும் திருடிச் செல்லாது என்பதை பலரும் ஆணித்தரமாக நினைத்திருப்பார்கள்.
அது எல்லாம் தவறு என்பதை அழகாக காட்டியுள்ளது இந்த காட்சி. இங்கு நபர் ஒருவர் வாடிக்கையாளருக்கு பொருளை கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில், பறவை ஒன்று பறந்து வந்து எடை மிஷின் மீது நிற்கின்றது.
பின்பு அதன் மேல் இருந்த ரூபாய் நோட்டினை அலேக்காக தூக்கி சென்று பணத்தினை வைக்கும் இடத்தில் வைத்துள்ளது. குறித்த பறவை தற்போது விளையாட்டாக செய்துள்ளது என்று நினைத்த அனைவருக்கும் இது ஒரு ஏமாற்றத்தினை அளித்துள்ளது.