குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து சம்பவம்... கருப்பு பெட்டியை கண்டுபிடித்த அதிகாரிகள்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த நாளில் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பிபின் ராவத்துடன் 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 (MI17 V 5) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, எரிந்த நிலையில் மீட்டகப்பட்ட உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டயறிப்பட்டுள்ளன.
பிபின் ராவத் உடல் இன்று டெல்லிக்கு எடுத்துக் செல்லப்படுகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என கண்டறிய ஹெலிகாப்டரில் உள்ள கருப்புப் பெட்டி அவசியம்.
இந்த கருப்புப் பெட்டியில் கமாண்டர் பேசிய உரையாடல் பதிவாகியிருக்கும். இதை நிபுணர்கள் தேடிவருகின்றன. மேலும், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் சுற்றளவில் தேடினர்.
தற்போது, கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனல் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள நிபுணர்கள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தடய அறிவியல் துறை மற்றும் விமானப்படை அதிகாரிகள் அந்தாதியை தேடுதலின் வேட்டையில் கருப்பு பெட்டி கிடைத்து இருக்கிறது.