தண்டவாளத்தில் சிக்கிய பைக்! நொடியில் சுக்குநுறாகிய காட்சி: மயிரிழையில் தப்பித்த நபர்
இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு பிரச்சினை எந்த ரூபத்தில் வருகின்றது என்பதை சிறிதும் கணிக்க முடியாமலேயே இருக்கின்றது.
ஆம் ஆங்காங்கே எதிர்பாராத விபத்துக்களும், அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.
இங்கு நபர் ஒருவர் தண்டவாளத்திற்கு அருகே பைக்குடன் நின்றுள்ள நிலையில், எதி்ர்பாராத நேரத்தில் பைக்கை இழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயில் கேட்டை கடக்க முயன்ற நபர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருக்க, மற்றொரு தண்டவாளத்திலும் ரயில் வந்து கொண்டிருந்தது.
ஆனால் மற்றொரு தண்டவாளத்தில் ரயில் வருவதை அவதானிக்காத நபர் தனது இருசக்கர வாகனத்துடன் தண்டவாள பக்கத்திலே சென்று நின்றுள்ளார்.

அருகில் இருந்த நபர் ரயில் வருவதை தெரிந்து மற்றவர்களுக்கு கூறவே அனைவரும் பின்வாங்கி சென்றுள்ளனர். ஆனால் இந்த இரு சக்கர வாகனத்தில் நின்ற மனிதர் மட்டும் பின்னோக்கி வராமல் வாகனத்தை முன்னோக்கி சென்று வளைத்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக வாகனம் தண்டவாளத்தில் சிக்கிக்கொள்ளவே எடுப்பதற்கு படாதபாடு படுகின்றார். அதற்குள் ரயில் மின்னல் வேகத்தில் வரவே வாகத்தை அப்படியே போட்டுவிட்டு தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.
அவர் நகர்ந்த சில நொடிகளில் ரயில் மின்னல் வேகத்தில் பைக்கை இழுத்துச் சென்றதுடன், சுக்குநூறாகவும் துவம்சம் செய்துள்ளது.