இரவில் பேசிக்கொள்ளும் கடவுளின் மர்ம சிலைகள்! இதுவரை வெளிவராத மர்மம் நிறைந்த அதிசய கோவில்
பொதுவாக ஆலயங்கள் என்றாலே, அதில் தனிச்சிறப்பும், தனி வரலாற்றையும் கொண்டிருக்கிறது. அதிலும் சில ஆலங்களின் வரலாற்றை கேட்கும் போதே உடல் சிலிர்த்து போய்விடுகிறது. இன்னும், சில ஆலயங்களில் ஆன்மிக ஆச்சர்யங்களை உள்ளடக்கி விடை தெரியாத மர்மங்களைக் கொண்டிருக்கும்.
அப்படி மர்மங்கள் நிறைந்த ஒரு கோவிலைப்பற்றி தான் இங்கு பார்க்கபோகிறோம். பீகார் மாநிலம், பக்சார் என்ற பகுதியில், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பால திரிபுரசுந்தரி கோவில் அமைந்துள்ளது.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், அம்மனே பால திரிபுர சுந்தரி என்று அழைப்படுகிறாள். இந்த கோவிலில், வாழ்வில் உண்டாகும் சங்கடங்கள் மற்றும் சஞ்சலங்களையும் தீர்த்து வைக்க வேண்டி பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகிறார்கள்.
மேலும், இந்த கோவில் உள் நுழையும் போதே முன்பக்க வாயில் பிரம்மாண்டமாக உள்ளது. பகல் நேரத்தில் அம்மன் பாலதிரிபுர சுந்தரிக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இதனையடுத்து, இரவு நேரங்களில் இந்த கோவிலில் உள்ளே மர்ம குரல்கள் கேட்பதாக அங்கிருக்கும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த குரல்கள் கேட்பது எப்பொழுதாவது நிகழ்வது அல்ல, அன்றாடம் இரவு இத்தகைய குரல்கள் கேட்பதாகவும், சாமிசிலைகள் தான் தங்களுக்குள் பேசி கொள்வதாகவும் இங்கிருக்கும் மக்களும் கூறி வருகின்றனர்.
பேச்சு குரல்கள் தெளிவாக கேட்டாலும், அதன் வார்த்தைகளை அறிய முடியவில்லையாம். இரவு நேரத்தில் கேட்கும் பேச்சுக்குரலால் சிலர் இக்கோவிலை மர்மமான கோவில் என அழைக்கின்றனர்.
இந்த குரல்கள் எதனால் கேட்கிறது என இதுவரை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் கூட கண்டறிய முடியவில்லையாம்.
இதை ஆராய்ச்சி செய்து அறிய முடியாவிட்டாலும், கடவுளின் படைப்பையும், அதை நினைத்து மனதில் வேண்டுதலையும், வைத்தால் நன்மையே நடைபெறும் என்பது மட்டுமே அந்த ஊர் மக்களின் நம்பிக்கை.