சீறிக்கொண்டு படமெடுத்த பாம்பு! நடந்த ஆச்சரித்தை நீங்களே பாருங்க
விஷத்தன்மை வாய்ந்த பாம்பு கம்பீரமாக படமெடுத்து நின்ற நிலையில், ஆயுதப்படை அதிகாரி ஒருவர் மிகவும் லாவகமாக பிடித்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
ஆனால் இங்கு பாம்பு ஒன்று படமெடுத்து நின்ற நிலையில், மலேசிய ஆயுதப்படை அதிகாரி தனது வெறும் கையினால் குறித்த பாம்பை நேருக்கு நேர் நின்று பிடித்துள்ளார்.
மின்னல் வேகத்தில் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்த பாம்பு நபர் கை பட்டவுடன், கோபத்தை அடக்கிக்கொண்டு தானாக தலையை கீழே இறக்கியுள்ளது. இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.