Viral Video: வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்த முதலைகள்- CCTV காட்சியால் எழுந்த அச்சம்
வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்த முதலைகளின் CCTV காணொளி சமூக வலைத்தளப்பயனர்களை வியக்க வைத்துள்ளது.
விலங்குகளின் அட்டகாசம்
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு காணொளி வைரலவாது வழக்கம்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக விலங்குகளின் அட்டகாசம் காணொளிகளாக இணையவாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
காட்டில் மற்றும் நீர் நிலையங்களில் வாழும் பறவைகள் நவீன மயமாக்கலினால் நகரங்களுக்கு வந்து, மனிதர்களை தொந்தரவு செய்கின்றன. யானைகள், புலி, சிங்கம், பாம்பு உள்ளிட்ட பல விலங்குகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.
மனிதர்கள் விலங்குகள் வாழும் இடங்களில் வீடுகளை கட்டி, இடத்தை ஆக்கிரமிப்பு செய்த காரணத்தினால் காடுகள் அழிக்கப்பட்டு உணவுகளின்றி நகரங்களில் ஏதாவது உணவு கிடைக்குமா? எனத் தேடிக் கொண்டு விலங்குகள் மனிதர்கள் வாழும் இடங்களில் நடமாடுகின்றன.
அழையா விருந்தாளியாக வந்த முதலைகள்
இந்த நிலையில், இரண்டு முதலைகள் ஒரு வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அச்சு அசல் மனிதர்கள் போலவே கதவை திறக்க முயற்சிக்கின்றன. இதனை வீட்டின் உரிமையாளர் அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத போது வந்திருந்தால் ஆபத்துக்கள் எதுவும் இல்லாமல் தப்பிக்கலாம். அதே சமயம், வந்திருப்பது மனிதர்கள் தான் என நினைத்து கதவை திறந்திருந்தால் முதலைகள் வேட்டையாடியிருக்கும் என்ற அச்சம் பார்ப்பவர்கள் மத்தியில் வந்துள்ளது.
ஒரு முதளை மாத்திரமே கதவை திறக்க முயற்சிக்கிறது. அதனுடன் வந்த இன்னொரு முதலை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த காட்சி பார்ப்பதற்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்துகிறது என்பதால் நெட்டிசன்கள் இரவு வேளைகளில் வெளியில் செல்லும் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களை கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
