பிக்பாஸ் சீசன் -9: கலையரசனிடம் மொத்த விஷத்தையும் கக்கிய பார்வதி.. வில்லியாக மாறிய கனி!
எல்லோரையும் அவர் சொல்வதை கேட்க வைக்கிற குணம் தான் மிகப்பெரும் அரசியல்... என கனி பற்றி கலையரசனிடம் வில்லி போல் பேசிய பார்வதி.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார்.அதனை தொடர்ந்து. அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
முதல்வார எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டியிலிருந்து நந்தினி வெளியேறியிருக்கின்றார். தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் முதல்வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
மேலும் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள நபர்களின் பட்டியில் பார்வதி, கம்ருதின்,அரோரா,அப்சரா, கெமி, சபரி, எஃப்.ஜே,ரம்யா மற்றும் தீவாகரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருக்கின்றார்கள்.
கனி தான் வில்லி
இந்நிலையில்,ஆரம்பத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிவரும், பிக்பாஸ் வீட்டில் 10 ஆவது நாளான இன்று, பார்வதி கனி பற்றி கலையரசனிடம் வில்லி போல் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகளுடனும், கனி தான் வில்லியாக மாறிவருதாக புலம்பி தள்ளும் காட்சிகளுடனும் இன்றைய நாளுக்கான மூன்றாவது promo வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |