Bigg Boss7: இந்த வாரத்தில் அடுத்தடுத்து வெளியேறிய இரண்டு பெண் போட்டியாளர்கள்! யார் தெரியுமா?
இந்தவாரம் நடந்த பூகம்பம் டாஸ்க் படி இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலையில் அவர்கள் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Bigg Boss7
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த நிலையில், இந்த வாரம் நடத்தப்பட்ட பூகம்பம் டாஸ்க்கில் தோற்றால் 3 போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்றும் அதற்கு பதிலாக 3 போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
வழங்கப்பட்ட 3 டாஸ்க்குகளில் 2-ல் பிக்பாஸ் போட்டியாளர்கள் தோல்வியடைந்த நிலையில், இருவர் எலிமினேஷன் கிட்டத்தட்ட உறுதியானது.
வெளியேறிய 2 போட்டியாளர்கள்
வெளியேறும் 2 போட்டியாளர்களிள் பலவீனமான போட்டியாளராக பார்க்கப்படுகின்ற அக்ஷயா கண்டிப்பாக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.
அதனைத்தொடர்ந்து இன்னொரு போட்டியாளராக வெளியேற்றப்பட்டது பூர்ணிமா என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அந்த வகையில், சனிக்கிழமை எபிசோடில் அக்ஷயாவும், ஞாயிற்று கிழமை எபிசோடில் பூர்ணிமாவும் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரும் வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக நிக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘கதற விடப்போவதாக’ அவர் சபதம் எடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |