பிக்பாஸில் முளைத்த புது காதல் ஜோடிகள்? வெட்கத்தில் சிரித்த பாவனி...!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது இந்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்கை கொடுத்தது. இதில், அமீர் வெற்றி பெற்றார்.
ஆனால் பாவனி ரெட்டி தனது காயினை பயன்படுத்தி அமீரின் கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார். பிக்பாஸ் வீட்டின் கேப்டனான பாவனிக்கு பெனால்டி கொடுத்தார் பிக்பாஸ்.
அதனால், பெண் போட்டியாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், இன்றைக்கு வெளியான முதல் ப்ரோமோ காட்சியில், அமீர் பாவனியிடம் கொஞ்சி பேசிக்கொண்டு இருக்க, அருகில் இருந்த பிரியங்கா உங்க crush ஆ இவங்க என கேட்க, ஆமாங்க என அமீர் கூற பாவனி வெட்கத்தில் சிரித்து மகிழ்கிறார்.
இதனால், பிக்பாஸ் 5 முளைத்த முதல் காதல் ஜோடி இவர்கள் தானா? என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.