பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த நடிகர் ஆதி - பயங்கர கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்கள் டாஸ்களில் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.
கடந்த நாளில் அமீர் பவானிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
இதற்கு கமல் ஏதாவது பேசுவாரா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நடிகர் ஆதி நுழைந்து இருக்கிறார். அன்பறிவு படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதால் இந்த படத்தின் ப்ரோமோஷனிற்காக நுழைந்து உள்ளனர்.
மேலும், ஆதியிடம் இந்த வாரம் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று அவர் மூலம் கமல் அறிவிக்க சொல்ல பிரியங்காவின் பெயரை அறிவிக்கிறார். அபிநய் தான் இந்த வாரம் வெளியேறியுள்ளதாகவும் தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன.