வாயமூடிட்டு போடா... ஷாரிக்குடன் ஏற்பட்ட மோதலால் கண்ணீர் விட்டு அழுத வனிதா!
பிக்பாஸ் அல்டிமேட்டில் வார வாரமும் திங்கட்கிழமையன்று கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெல்லும் போட்டியாளர், அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க முடியும்.
பரப்பரப்பாக செல்லும் பிக்பாஸ் கேப்டன் போட்டிக்கான டாஸ்கில் வனிதா மற்றும் ஸ்ருதி விளையாடினர். கண்ணைக்கட்டிக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டில் வனிதா போங்காட்டம் ஆடியதை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்டுபிடித்து விடுகின்றனர்.
இதனால், மீண்டும் ஆட வைக்கலாம் என சினேகன் கூற அதற்கு வனிதா மறுப்பு தெரிவிக்கிறார். இதனைத்தொடர்ந்து, ஷாரிக் கண்ணை கட்டி விளையாடியது
உங்களுக்கு தெரிஞ்சது எனக்கூற, வனிதா என்ன தெரிஞ்சது நீ வா.. என பேசி வாய மூடுடா என கோபத்துடன் பேச ஷாரிக்கும் பதிலுக்கு தைரியமா இருந்தா நிண்ணு பேசும்மா என கூறுகிறார்.
பின், கண்பெஷன் ரூமில் சென்று வனிதா என்ன நியாம் இது என கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.