தீ பிடிக்கும் BGM உடன் பயணமாகும் பிக்பாஸ் அசீம்: விமான நிலையத்தில் வைத்து வெளியிட்ட வீடியோ!
பிக்பாஸ் சீசன் 6இன் டைட்டில் வின்னர் அசீம் தற்போது விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
டைட்டில் வின்னர் அசீம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பிப்பார்.
ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்து இன்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.
மேலும், பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ஷிவின், விக்ரமன் ஆகிய பிற இரண்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் பைனலுக்கு தகுதியாகி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் இந்த டைட்டிலை வென்றது பலருக்கு பிடிக்கவில்லை. அதனால் அசீமின் டைட்டிலை பறிப்பதற்கும் திட்டம் திட்டி வருகின்றனர்.
பயணமாகும் அசீம்
இந்நிலையில் இவர் தற்பொழுது மலேசியாவிற்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைக் காணலாம். இவர் மலேசியாவுக்கு எதற்காகச் சென்றுள்ளார் என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.