மது பழக்கத்தால் தொலைந்த நிம்மதி... இரண்டாவது திருமணம்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மாறிய வாழ்க்கை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான தாமரையின் வாழ்க்கையில் இடம்பெற்ற பல சோகமான விடயங்களை அவர் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் தாமரை
பிக்பாஸ் சீசன் 5இல் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர்தான் தாமரை. இவர் ஒரு நாடகக்கலைஞராகத் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இவரின் கொஞ்சலான பேச்சு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் பிடித்துப்போகவே 90 நாட்கள் அந்த வீட்டில் விளையாடி வந்தார்.
இவர் மிகவும் வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர். கடன் பிரச்சினைக் காரணமாகத்தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். ஆனால் 90நாட்கள் வரைதான் அந்த வீட்டில் தாக்குப்பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் சில சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார்.
வாழ்க்கையில் சந்தித்த சோகம்
தாமரைக்கு அவர் குடும்பத்தினர் ஏற்கனவே ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார். ஆனாலும் அவர் குடித்து விட்டு தினமும் சண்டைப் பிடித்துக் கொண்டு மோசமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.
அதன் பின் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அவரது கணவரின் குடிப்பழக்கத்தினால் நிறைய துன்பங்களை அனுபவித்ததாகவும், இன்னும் நிறைய பெண்கள் இவ்வாறான துன்பத்தை அனுபவிப்பதாகவும் கூறினார்.
அந்த வாழ்க்கையில் இருந்து வெளியில் வந்த பிறகு தான் மறுமணம் செய்துள்ளார். தாமரைக்கு மறுமணமாகி 12 ஆண்டுகள் ஆகியதாகவும் தன் கணவர் தன்னை விருப்பத்தோடு தான் திருமணம் செய்தார் இன்று வரைக்கும் கணவர் தன்னை நல்லமுறையில் கவனித்து வருவதாகவும் சொல்லியிருந்தார்.
மேலும், நாடகங்களை விட சீரியல்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளதாகவும் நாடகங்களில் நடிக்கும் போது நாம் நினைப்பதை செய்யலாம் ஆனால் சீரியலில் டைரக்டர் சொல்வதை தான் செய்ய வேண்டும்.
நான் பிக்பாஸ் வீட்டில் சுற்றி கெரமா இருக்கும் போது தான் நடிப்பதாக கூறினார்கள் ஆனால் வெளியே வந்து சீரியல்களில் நடிக்கும் போது எனக்கு நடிக்கவே தெரியவில்லை என்று கூறுவதாகவும் நான் விமர்சனங்களை தவிர்த்து விட தொடங்கி விட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |