பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த பெண் தொழிலதிபர் கலந்துகொள்ளவில்லையா? அவரே வெளியிட்ட பதிவு
பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய விவரம் அடிக்கடி வெளிவந்துகொண்டு இருக்கிறது.
இதனையடுத்து, ஷகிலாவின் மகள் மிளா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை பிரியாராமன், டிக்டாக் புகழ் ஜிபி முத்து, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி உள்பட ஒருசில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், தற்போது லீக்கான தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ரேணுகா பிரவீன் அவர்களும் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும், தென்னிந்தியாவின் முதல் கண்கள் சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லரை சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடங்கி நடத்தி வரும் ரேணுகாவின் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களாக பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டும் உள்ளனர்.
இதனால், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வெளிநாட்டு தமிழர் ஒருவர் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேணுகா பிரவீன் கலந்துகொள்ள இருக்கிறார் என கூறப்பட்டது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவர், நான் பிரித்தானியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதால், நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தான் என்று நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.


