பதற வைக்கும் அடுத்த ப்ரோமோ! அபிஷேக் காலில் விழுந்து கதறும் தாமரை.... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் தாமரையிடம் பேசும் அபிஷேக் எல்லோரும் உனக்குதான் வேலை பார்த்துட்டு இருக்காங்க என்று கூறுகிறார்.
இதனைக் கேட்ட தாமரை அபிஷேக்கின் காலில் விழுந்து நீ சொன்ன வார்த்தையே போதும் என்கிறார்.
உடனே தாமரையை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும் அபிஷேக் அவரை கட்டியணைத்தப்படியே ஆறுதல் கூறுகிறார். இதனை தொடர்ந்து ராஜூவிடம் பேசும் இமான் அண்ணாச்சி யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு தாமரையை காப்பாற்ற விரும்புகிறேன் என்று கூறுகிறார்.
#Day16 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/Hi4ci0zW5h
— Vijay Television (@vijaytelevision) October 19, 2021
பின்னர் பிரியங்கா மற்றும் அபிஷேக்கிடமும் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார் இமான் அண்ணாச்சி. அவர்களும் தாமரையின் பெயரையே கூற எல்லோரும் தாமரையின் பெயரையே சொல்கிறீர்களே, ஏன் என்று கேட்கிறார்.
மேலும் தாமரையை காப்பாற்ற நிறைய பேர் இருக்காங்க.. நீங்கள் ஏன் சின்னப்பொண்ணை காப்பாற்றக்கூடாது? என்று பிரியங்காவிடம் கேட்கிறார் இமான் அண்ணாச்சி. அதற்கு பதில் கூறும் பிரியங்கா நான் சின்னப்பொண்ணை தான் நாமினேட் செய்திருக்கேன் என்று ஓபனாக சொல்கிறார்.