உடல் மெலிந்த தோற்றத்தில் கமல்... பரிதாப நிலையால் பதறிய ரசிகர்கள்! எப்படி இருக்கின்றார் தெரியுமா?
மருத்துவமனையில் இருந்து உடல் மெலிந்த நிலையில் வீடியோவில் பேசிய கமலை பார்த்து ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் புதிய தொகுப்பாளரையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் இன்றைய எபிசோட் தொடங்கியதுமே லிவிங் ஏரியாவில் கமலை எதிர்பார்த்து அமர்ந்திருந்த ஹவுஸ்மேட்ஸிடம் பேசினார் பிக்பாஸ்.
அப்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
கமல் குறித்து பிக்பாஸ் அறிவித்ததுமே போட்டியாளர்கள் பதறி போனார்கள். தொடர்ந்து மருத்துவமனை டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை சந்தித்ததார் கமல்.
அப்போது, வணக்கம் என்று ஆரம்பித்த கமல், மருத்துவமனை டிவியில் இருந்து சந்திக்கிறேன்.
கோவிட்டெல்லாம் வெறும் வதந்தி இன்று இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இது ஒரு செய்தி.
இன்னொரு அலை வரக்கூடும் என்ற ஞாபகமறதி உள்ளவர்களில் நானும் ஒருவனாகிவிட்ட நிலையில் எனக்கே வந்து என் மூலம் செய்தி சொல்ல வைத்திருப்பதை நான் சமூதாய கடமையாக உணருகிறேன்.
நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதும், உங்கள் முன்பு பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் 2 தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பலன்தான் என்றார்.
மேலும் தனக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பெரிய அரசியல் தலைவர்கள் என பலருக்கும் நன்றி கூறினார் நடிகர் கமல்ஹாசன்.
இதேவேளை, வீடியோ காலில் கமல் பேசிய எபிசோட்டை பார்த்த ரசிகர்கள் பதறி போயுள்ளனர். கமல் உடல் சற்று மெலிந்த தோற்றத்துடன் இருப்பதால் அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.