கதறிய தாமரை...வெளுத்துக்கட்டிய அண்ணாச்சி! ஆவேசமாக மோதிய பின்னர் வெடித்த சண்டை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடைபெற்ற வெற்றிக் கொடிக் கட்டு டாஸ்க்கில் இரண்டு கட்சிகள் வெற்றி பெற்றன.
இதற்காக ஹவுஸ்மேட்ஸ் மூன்று அரசியல் கட்சிகளாக பிரிந்துள்ளனர்.
ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு என தனிச் சின்னம், தனிக் கொடி மற்றும் கொள்கைகளை கொண்டுள்ளனர்.
அதன்படி கார்டன் ஏரியாவில் போடப்பட்ட வட்டத்திற்குள் இரண்டு கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா ஒருவர் என மூன்று போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும்.
முதல் பஸருக்கு போட்டியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது பஸருக்கு கொடி கம்பத்தில் தங்களின் கொடியை நடும் போட்டியாளர்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
மொத்தம் 6 ரவுண்டுகளாக போட்டி நடைபெற்றப்பட்டது. இதில் ராஜுவின் பிக்பாஸ் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சஞ்சீவின் என்பிபி கட்சிகள் தலா 6 மதிப்பெண்களை பெற்றது. பிரியங்காவின் உரக்க சொல் கட்சி வெறும் நான்கு மதிப்பெண்களை பெற்றது.
இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற இரண்டு கட்சிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியின் ஒரு சுற்றில் அண்ணாச்சி, பாவனி மற்றும் தாமரை செல்வி ஆகியோர் மோதினர். அப்போது தாமரையின் கொடி கீழே விழவும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இமான் அண்ணாச்சி, தமாரை செல்வியுடன் செமயாய் மல்லுக்கட்டி வெற்றி பெற்றார்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத தாமரை செல்வி, அண்ணாச்சியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது விளையாட்டு இல்லை என்று கதறினார்.
இருப்பினும் இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.




