எச்சரித்தும் வார்த்தையை விட்ட தாமரை! கமல் முன்பே முட்டி மோதிய பெண் போட்டியாளர்கள்…. விளாசிய ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் மோசமாக சண்டை போட்டுக்கொண்ட பாவனியையும் தாமரை செல்வியையும் விளாசி விட்டார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பால் கறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கின் போது பாவனிக்கும் தாமரை செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள கைகளை ஓங்கினர். தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்தினர்.
இதனால் சமூக வலைதளங்களில் பாவனியையும் தாமரை செல்வியையும் நெட்டிசன்கள் விளாசினர்.
இந்நிலையில் இன்று அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் தாமரையிடமும் பாவனியிடமும் சண்டை குறித்து விசாரித்தார். இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டதோடு கமல் முன்பே வாக்குவாதம் செய்து கொண்டனர்.
கமல் தடுக்க முயன்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களின் அந்த நடத்தையால் கமலே கடுப்பானார். பின்னர் இருவரும் கைகளை ஓங்கிக்கொண்டது குறித்தும் பேசினார் கமல்.
நீங்கள் கைகளை ஓங்கியதை பார்த்ததும் ஒன்னு விட்ட சகோதரிகளாக ஆகிவிடுவீர்களோ என்று தோன்றியது என்றார்.
மேலும் பட்டு பட்டுன்னு பேசாமல் படாமல் பேசுங்கள் என்றும் சூடுபோட்டார்.
மேலும் தரத்தையும் கண்ணியத்தையும் குறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்த கமல், தாமரையிடம் உங்கள் மகன் பார்க்கிறார், அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற கமல் நீங்கள் கோபப்படுவதை பார்த்தால் உங்கள் மகன் அம்மா என்ன இப்படி கோபப்படுகிறார் என்று கூறப்போகிறார் என்றார்.