Attach ஆகிட கூடாதுன்னு மட்டும் ரொம்ப தெளிவா இருந்தேன்... சுபிக்ஷா ஓபன் டாக்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சுபிக்ஷா, பிக்பாஸ் வீட்டில் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.Attach ஆகிட கூடாது-னு நினைத்தேன் என வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் எட்டிவருகின்றது.

கடந்த வாரம் போட்டியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி பார்வதியும் கம்ருதினும் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவதாக அந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேற்றப்படிருந்தார்.
சுபிக்ஷா வெளியேறிய போது பிக்பாஸ் மிகவும் கனிவாக பேசி வழி அனுப்பி வைத்தார். மேலும் சுபிக்ஷாவை நினைத்து பெருமைப் படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக, பிக்பாஸ் போட்டியில் வாரத்தின் முதல் நாள் யாரெல்லாம் நாமினேட் செய்யப்படுகிறார்களோ, அவர்களில், மக்கள் மத்தியில் யாரெல்லாம் வாக்கு குறைவாக பெற்றிருக்கிறார்களோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அந்தவகையில், கடந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சுபிக்ஷா வெளியேற்றப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுபிக்ஷா, பிக்பாஸ் வீட்டில் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன் என குறிப்பிட்டுள்ள காணொளி இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |