கெட்ட வார்த்தையில திட்டுறாங்க! கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட செரீனா
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார் செரினா.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இதுவரை சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, செரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாததால் ஜிபி முத்து தானாக வெளியேறினார்.
இதில் விதிகளை மீறிய செரீனாவுக்கு பலத்த எதிர்ப்பும் இருந்தது, பொம்மை டாஸ்கில் ஓவர் ஆக்டிங் செய்தார் என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தன.
கமல்ஹாசன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தொடர்ந்து மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
கமலின் அட்வைஸ்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் செரீனா அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும்முன் பலரும் பலவிதமான அறிவுரைகளை கூறினார்கள், நாம் கமல் சாரிடம் கேட்டேன், அதற்கு அவர் “நீங்களாக இருங்கள்” என்றார்.
நானும் நானாக தான் இருந்தேன், இதை ஒரு விளையாட்டாக மட்டுமே பார்த்தேன், ஒருநாளில் நடந்த விடயங்களை மறுநாளைக்கு கொண்டு செல்வதில் எனக்கு விருப்பமில்லை.
இது ஒரு விளையாட்டு, அனைவருமே அவர்களது விளையாட்டை விளையாடினார்கள், நானும் அப்படித்தான் என தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பேசியது ஏன்?
மலையாளத்தில் பேசியதற்காக நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், ஆயிஷா மிகவும் உடைந்து போயிருந்ததால் தமிழில் ஆறுதல் கூற எனக்கு தெரியவில்லை.
அதனால் என்னுடைய தாய்மொழியில் பேசிவிட்டேன், நான் பேசுவது மற்றவர்களுக்கு புரியவில்லை என கூறினார்கள், மக்களுக்கும் புரியாது என்று நினைத்துவிட்டேன்.
வெளியே வந்து பார்த்தபோது தான் எனக்கு தெரிகிறது, மன்னித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
கெட்ட வார்த்தையில் திட்டாதீங்க
விமர்சனங்கள் பற்றி பேசுகையில், Postive Comments களை எடுத்துக்கொள்ளும் போது Negative Commentsகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அதற்காக கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டாதீங்க, எனக்கு குடும்பம் இருக்கிறது, அதனால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கெட்டவார்த்தைகள் பயன்படுத்தும் போது, அது நீங்களாக இருந்தால் உங்கள் குடும்பத்தை பாதிக்கும் அல்லவா?
அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இது என்னுடைய வேண்டுகோள். நான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் கெட்ட வார்த்தையில் மட்டும் திட்டாதீங்க என தெரிவித்துள்ளார்.